வேலூரில் ஊதுபத்தி கம்பெனி நடத்தி வரும் செந்தில்குமார் (42) என்பவரின் தொழிற்சாலையில் நேற்று (பிப். 8) அதிகாலை குச்சிகள் வைத்திருந்த மூட்டைகள் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். முன்விரோதம் காரணமாக தொழிற்சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக செந்தில்குமார் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.