2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மார்ச் 03 நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் PTR. பழனிவேல், கோவி. செழியன், TRB. ராஜா, டிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.