சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்த கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரியும் அன்பரசன் என்பவர் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லவே அன்பரசனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.