வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் வெற்றிக்கான கல்வி சவால்களை எதிர்கொள்ளும் விதிமுறைகள் குறித்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஒரு மதிப்பெண் வினா விடை புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் சத்தியபிரபா ஆகியோர் கலந்துகொண்டனர்.