இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் என 13, 179 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் பிடித்த தலா 708 பேர் என மொத்தம் 2124 பேருக்கு 42 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அத்தோடு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் குடியாத்தத்தில் உள்ள அரசு திருமகள் ஆலை கல்லூரி மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பெற்ற நிலையில் அவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவில்லை என்றும் இரவு ஏழு முப்பது மணி வரை காக்க வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
அனைத்து ஆட்சியருக்கு தெரியப்படுத்திய போது விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.