வேலூர்: மயான கொள்ளை விழாவில் 60 அடி தேர் சாய்ந்து விபத்து

வேலூர் பாலாற்றங்கரையில் நேற்று மாலை மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் 10 ஊர்களில் இருந்து அம்மனை அலங்கரித்து தேரில் பாலாற்றுக்கு அழைத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சூறையாடல் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு காட்பாடி கழிஞ்சூரில் இருந்து வந்திருந்த 60 அடி உயரம் கொண்ட தேர் பாலாற்றில் இருந்து சாலைக்கு இழுத்து வரும் போது திடீரென நிலைதடுமாறி பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் தேரில் இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை காவல் துறையினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி