பெண்ணிடம் ரூ. 1¾ லட்சம் மோசடி!

வேலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் வங்கி லோகோவுடன் கூடிய குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்ய வேண்டுமென்றால் குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது ஆதார், ஏ. டி. எம். கார்டு, வங்கி விவரங்களை பதிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதை நம்பிய அவர் அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து தனது வங்கி விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவதாக வரும் தகவலை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி