வேலூர்: விடுதியில் மயங்கி விழுந்து வடமாநில வாலிபர் பலி

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ பகுதியை சேர்ந்த சேடிலால் மகதோ மகன் கிஷன்ராஜ் மகதோ (வயது 26), விவசாயி. உடல் நலக்குறைவாக இருந்த அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி வந்தார். இங்கு காகிதப்பட்டறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிஷன்ராஜ் மகதோ தனது அறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிஷன்ராஜ் மகதோவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி