இந்த நிலையில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (22) என்பவர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த உதயகுமார், கார்த்திகேயனை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்தார்.
இது குறித்து அவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓல்டு டவுன் பகுதியில் பதுங்கி இருந்த உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.