வேலூர்: 4 காவலர்கள் சஸ்பெண்ட் - எஸ்பி உத்தரவு

வேலூர் காட்பாடியில் கடந்த 2021ம் ஆண்டு யாசகரை கொலை செய்த வழக்கில் பாபுஷேக் என்பவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். உடல்நல குறைவு காரணமாக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி, நேற்று காலை மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் கண்ணன், பாண்டியன், கோகுல், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரை சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி