இந்தநிலையில் 5-ம் கட்டமாக செல் டிராக்கர் மூலம் ரூ. 26 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பலான 130 செல்போன்களும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சி. இ. ஐ. ஆர். போர்ட்டல் மூலம் ரூ. 24 லட்சம் மதிப்பில் 120 செல்போன்கள் என மொத்தம் 250 செல்போன்கள் மீட்கப்பட்டது.
அந்த செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் புனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
செல்போன்களை உரியவர்களிடம் எஸ்பி மணிவண்ணன் ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக்கொண்டவர்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்தனர்.