திருவிழாவிற்காக வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் வந்துள்ளார்.
ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை அருகில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து தனது தாய் வீட்டிற்குச் சென்ற அவர் இன்று திருவிழாவிற்காக நகைகளை போட்டுக்கொள்ள டிராவல்ஸ் பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது பேக்கில் வைத்திருந்த 5 1/4 சவரன் ஆரம் மற்றும் 2 1/4 சவரன் நெக்லஸ் உள்ளிட்ட ஏழரை சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது உமராபாத் காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்து நீங்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளனர்.