வேலூர்: 6 கிலோ ஆன்ஸ் குட்கா பறிமுதல் : பெண் கைது

வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் பள்ளி அருகில் பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 6 கிலோ ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல், பெண் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் ஷாஹீன் என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்ந்து விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நகர போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஷாஹீன்(40) என்பவர் நடத்தி வந்த பெட்டி கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 6 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்த ஷாஹீன்(40) என்ற பெண் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி அருகில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி