ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உறவினர்களிடையே ஏற்பட்ட சண்டையின் போது, சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் ரூ.300 ஜிபே மூலம் லஞ்சமாக பெற்ற காவலர் கல்பனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.