அரபிக் டியூஷனில் மாணவனை ஆசிரியர் தாக்கும் வீடியோ வைரல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அரபிக் டியூஷன் செண்டரில், ஆசிரியர் சுஹேல் என்பவர் கடந்த 3 ஆம் தேதி மாணவர்களை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த டியூஷன் சென்டர் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி