வாணியம்பாடி: மாமா மீது கொண்ட ஆத்திரத்தில் காரைத் திருடிய மைத்துனர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், குடும்பப் பகை காரணமாக மைத்துனர் வசீம், தனது நண்பர் முகமது இலியாஸுடன் சேர்ந்து சதாம் உசேனின் காரைத் திருடி, வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் இருவரையும் கைது செய்து, திருடப்பட்ட காரை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி