திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைக்குட்டை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறந்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் சீருடைகளை ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மாணவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.