திருப்பத்தூர்: மாணவர்களின் பொய் கடத்தல் நாடகத்தால் ஏற்பட்ட பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் தர்ஷணும் எல்லப்பள்ளி அடுத்த ஜலியூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்தும் எட்டாம் வகுப்பு வரை நாற்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி பயின்று வந்துள்ளனர்.

இந்நிலையில் தர்ஷன் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு கல்வி பயில பெற்றோர்களால் சேர்க்கப்பட்டுள்ளார். எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்த இருவரும் ஒன்பதாம் வகுப்பில் பிரிந்த காரணத்தினால் பள்ளியை கட்டடித்துவிட்டு நாற்றம்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாட புத்தகங்களை வைத்துவிட்டு அவ்வழியாக சென்ற வாகனத்தில் லிப்ட் கேட்டு நாட்றம்பள்ளி அடுத்த டோல்கேட் பகுதி வரை சென்று மீண்டும் அங்கிருந்து வேறு ஒரு டாட்டா ஏஸ் வாகனத்தில் லிப்ட் கேட்டு நாற்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு ஊர் சுற்ற சென்றுள்ளனர்.

அப்போது அந்த குறிப்பிட்ட இடம் வந்த பொழுது டாட்டா ஏஸ் ஓட்டுனரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி மாணவர்கள் கேட்ட பொழுது அதை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதால் இருவரும் ஒருவர் பின் ஒருவர் வாகனத்தில் இருந்து கீழே குதித்து காயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி