அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 30 வகையான கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு 137 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பைச் சார்ந்த 75 மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும், 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 62 பேர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க செல்ல இருந்தனர்.
மேலும் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் மாணவ மாணவிகளின் பேருந்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேருந்து ஓட்டுனரிடம் மிக கவனமாக பேருந்தை இயக்குங்கள் என அறிவுரை வழங்கினார்.