திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் அருகே பாலாற்றில் தடுப்பணை இருந்து வருகிறது. இந்த தடுப்பணையில் புதர்கள் அதிகமாக சூழ்நிலையில் காணப்படுகின்றன. மேலும், தடுப்பணையின் ஒருபுறம் அதிகமாக சேதமடைந்துள்ளது. மேலும், மழைக்காலம் வருவதற்கு முன் தடுப்பணையை சீரமைக்குமாறு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.