திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் தேங்கி இருப்பதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.