திருப்பத்தூர்: வக்ஃபு வாரிய திருத்த மசாதாவுக்கு எதிர்ப்பு.. கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டு, ஜமா ஆத்துல் உலமா சபை, அரசியல் கட்சிகள், இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி (AIMIM கட்சி), வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா, SDPI உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஜமாஅத் அமைப்புகள், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றி வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் 1 ஏடிஎஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பிக்கள், 7 ஆய்வாளர்கள், 30 உதவி ஆய்வாளர்கள் உட்பட 300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி