இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடி வைத்திருப்பதால் சமூக விரோதிகளை சுற்றுச்சுவரை சேதப்படுத்தி இரவு நேரங்களில் பூங்காவுக்குள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை அறிந்த நகராட்சி நிர்வாகம் மீண்டும் பூங்காவை புதுப்பிக்க நகர மன்ற கூட்டத்தில் பூங்கா புனரமைப்புக்காக ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் அடிப்படையில் பூங்கா புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
புனரமைப்பு பணியின்போது பூங்கா சுற்றுச்சுவர் 8 அடியில் இருந்து 4 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரும்பவில்லை. எனவே, சுற்றுச்சுவர் உயரத்தை குறைக்க வேண்டாம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.