வேலுர்: திமுக கவுன்சிலர் அமைக்கும் தார் பிளாண்டுக்கு எதிர்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னமோட்டூர், கத்திரிக்காயன் மற்றும் சுமகரியான் வட்டம் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களில் வீடுகள் கட்டிக் கொண்டு விவசாயம் செய்தும், ஆடு மாடுகளை வளர்த்து அதில் வரும் பொருளாதாரத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை போக்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலங்களை ஒட்டி அப்பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு குட்டைகளும் உள்ளதால் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு விடும் போது அங்குள்ள குட்டையில் தண்ணீர் அருந்தி வருகின்றன. 

மேலும் விவசாயத்திற்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் பள்ளி, விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டி நாட்றம்பள்ளி திமுக ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் என்பவர் தார் பிளாண்ட் அமைப்பதற்காக கனரக வாகனங்கள் மூலம் மிஷின்களை கொண்டு வந்து தார் பிளாண்ட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைக்கப்படும் தார் பிளாண்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடி மாவட்ட சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி