திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள திம்மம்பேட்டை மோட்டூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனத்தை விட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.