ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கஸ்பா பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் சபீர், திமிரி வழியாகச் சென்றபோது மருத்துவம்பாடி அருகே அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திமிரி காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.