வாணியம்பாடி அருகே தனியார் பள்ளியில் பதவிப்பிரமாண விழா

வாணியம்பாடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் அணித் தலைவர் மற்றும் மாணவர் மன்றத் தலைவர் பதவிப்பிரமாண விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி வட்டாட்சியர் உமா ரம்யா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து, மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி