தேசிய மருத்துவ குழுவினர் வாணியம்பாடி மருத்துவமனையை ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையை, தேசிய தர உறுதி குழுவைச் சேர்ந்த டியூலாஷாப், ரமேஷ் நாயக், ஜார்ஜ் இமானுவேல் ஆகியோர் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மற்றும் பழைய மருத்துவமனைகளில், பொது மக்களுக்கு தரமான சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படுகிறதா, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்கிறார்களா என அவர்கள் கேட்டறிந்தனர். மகப்பேறு வார்டு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், அறுவை சிகிச்சை பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு, நோயின் தன்மை மற்றும் தரங்கள் குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி