திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.