திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் லாரி சர்வீஸ் (MAR ) அலுவலகத்தில் கடந்த 5 வருடங்களாக கரும்பூர் பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று பணிக்குச் சென்று லாரியில் இருந்த பார்சல்களை டெலிவரி செய்துவிட்டு மீண்டும் லாரி சர்வீஸ் அலுவலகத்தில் லாரியை கொண்டு சென்று விடும்போது எதிர்பாராத விதமாக இரும்பு ஷெட்டர் லாரி ஓட்டுநர் ஹேம்நாத் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கு பணியில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.