அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில், கட்சி தலைமையுடனும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். அவர் மீது கோடிக்கணக்கில் பண மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், மீண்டும் இணைந்தாலும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. தற்போது, வரும் 14-ம் தேதி ஜோலார்பேட்டை பொன்னேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல மாநாட்டில், நிலோபர் கபில் திமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.