திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜூன் 14) முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து ஜனதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.