வேலூர்: 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நேற்று(அக்.2) 100 டிகிரி தாண்டி வெப்பம் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் திடீரென வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான கொடையாஞ்சி, அம்பலூர் புத்துக்கோயில், நியூடவுன், பெரியபேட்டை, செட்டிபண்ணூர், பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், இதே போன்று ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான சான்றோர் குப்பம், மின்னூர், அய்யனார் கன்னிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

மழையால் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர். காலையிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென இரவு நேரத்தில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி