அந்த வகையில் வாணியம்பாடி பகுதிகளில் ஆற்றுமேடு, சின்னாபாலாறு உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனியாக ஆடு மற்றும் மாடுகளை வாங்குவதற்காக பிரத்தேகமாக நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் தற்போது சின்னாறு மற்றும் கிளை ஆறுகளில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வார சந்தை பகுதிகளில் மற்றும் ஆற்றுமேடு பகுதிகளில் இஸ்லாமிய பெருமக்கள் அதிகளவில் ஒன்று கூடி ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளில் இத்தகைய செயல் அரங்கேறி வருவதால் இஸ்லாமிய பெருமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் வாணியம்பாடி பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு ஆடு மற்றும் மாடுகள் வர்த்தகம் நடைபெற்றது. இருந்தாலும் கூட இஸ்லாமிய பெருமக்கள் ஒரே இடத்தில் ஆடு மாடுகள் வாங்க முடியாமல் இங்கும் அங்கும் அலைந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.