வேலூர்: மின்சார இருசக்கர வாகனம் சார்ஜர் போட்டு இருந்தபோது தீ விபத்து

வாணியம்பாடி காஜா நகரில் ஷபீக் என்பவர் வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் சார்ஜில் போட்டு இருந்த போது மின் கசிவு காரணமாக தீ விபத்து. மின்சார இருசக்கர வாகனம் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் உள்ள ஜன்னல்கள் தீயில் கருகி சேதம். நகர போலீஸார் விசாரணை. 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காஜா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் ஷபீக் அஹமத், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை இவரது மின்சார இருசக்கர வாகனத்தை வீட்டில் சார்ஜில் போட்டுள்ளார். சற்று நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டு மின்சார இருசக்கர வாகனம் தீ பிடித்து இருந்தது. அப்போது அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் வீட்டில் ஜன்னல்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. 

வீட்டில் இருந்து கூக்குரல் வந்ததால் பகுதிமக்கள் விரைந்து சென்று மின் இணைப்பு துண்டித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் மின்சார இருசக்கர வாகனம், பல்சர் பைக் மற்றும் வீட்டு ஜன்னல்கள் தீயில் கருகி சேதம் அடைந்தது. சம்பவம் குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி