திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர், கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான பொது வழியை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், இன்று (மே 22) ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினர் அந்த ஆக்கிரமிப்புக் கட்டிடத்தை அகற்றினர்.