நாட்றம்பள்ளியில் தேர்தல் அலுவலர் விளக்கம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகத்தில், கே.சி. வீரமணி தொடர்பான மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க வந்த நபர்களை அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் யாஷா முத்கல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர், இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், காவல்துறையினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி