திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் புதர் போல் உள்ள மறைவான பகுதியில் தொடர்ந்து இரவு பகலாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு ரயில் நிலையத்தை ஒட்டி முட்புதர் நிறைந்த மறைவான பகுதியில் அமர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அபுபக்கர், முருகன், முபாரக், ஜெயிலாவுதீன், முஸ்தாக், கோவிந்தசாமி, சரவணன், ஏழுமலை உள்ளிட்ட 8 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து வாணியம்பாடியில் சில காவல்துறையினர் உதவியுடன் கஞ்சா, காட்டன் சூதாட்டம், கள்ளச் சந்தையில் மது விற்பனை, மணல் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அமோகமாக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபோன்ற செயலில் ஈடுபடும் காவல்துறையினரை களையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.