திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவரும், திமுக கிளை செயலாளருமான சிவலிங்கம் என்பவர் ஆபாச வார்த்தைகளால் வருத்தெடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.