வாணியம்பாடி, செப். 29-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பாக திமுக நகர செயலாளர் வி. எஸ். சாரதி குமார் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் கே. தென்னரசு, அவைத்தலைவர் முஹம்மத் ஜான், நகரமன்ற துணைத்தலைவர் கயாஸ் அஹமத், சலீம், அலெக்ஸ், சிவா, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் ஓ. எம். பிரகாசம், நகரமன்ற உறுப்பினர்கள் மா. பா. சாரதி, ஷாஹின் பேகம், குபேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.