வேலூர் வேலப்பாடி பெரிய தனம் சுப்பராய முதலியார் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது தந்தை வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் அந்த மனுவில் எனது மகன் சென்னையில் சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார் அவர் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் சென்னையில் உள்ளது கடந்த 26 ஆம் தேதி அவர் சென்னையில் இருந்து வேலூருக்கு ரயில் வந்து கொண்டிருந்தார் காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் அனுப்பப்பட்டிருந்தது அவரது மோட்டார் சைக்கிள் சென்னையிலிருந்து வேலூரில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.