பள்ளிகொண்டா அருகே தொட்டியில் விழுந்து குழந்தை பலி

பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு அருகே மந்திரிபட்டியில் வசிக்கும் முருகன்-ரேகா தம்பதியினரின் 2 வயது மகள் வர்ஷா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். தேடியபோது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வர்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே வர்ஷா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி