அரக்கோணம் மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, மும்பை ரயிலில் வந்த சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த அருண் மற்றும் திருவல்லிக்கேணி முனீர் பாஷா ஆகியோரை 10 கிலோ கஞ்சா மற்றும் 1000 வலி நிவாரணி மாத்திரைகளுடன் கைது செய்தனர். சென்னைக்கு பேருந்தில் செல்ல ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தபோது அவர்கள் பிடிபட்டனர். போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.