வாணியம்பாடி அருகே கல்குவாரியில் இளைஞர் சடலம் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் முரளி, நேற்று (ஜூன் 3) நெக்னாமலை அடிவாரத்தில் உள்ள மூடப்பட்ட கல் குவாரியில் நண்பர் பூவரசனுடன் மது அருந்திவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது முரளி மாயமானதால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உடன் சென்ற நண்பர் பூவரசன் கைது செய்யப்பட்டார். பின்னர், தீயணைப்புத்துறையினர் கல் குவாரியில் இருந்து முரளியின் சடலத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி