திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக்கூடாது என வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர் A. P. முருகேசன் தலைமையில் (மீண்டும் மஞ்சப்பை) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோ. அன்பரசன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.