போதை பொருட்கள் கடத்திய ஆந்திர மாநில வாலிபர் கைது!

பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி-குருநாதபுரம் கிராமத்தில் மேல்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் புங்கனூரை சேர்ந்த கார் உரிமையாளர் பரத் (வயது 28) என்பதும், போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்து தமிழ்நாட்டிலுள்ள கடைகளுக்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் 40 கிலோ எடையிலான போதை பொருட்கள், ரூ. 90 ஆயிரம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பரத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி