திருப்பத்தூர்: இருசக்கர வாகனம் மோதி விபத்து; வாலிபர் படுகாயம்

திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த தணிகைமலை ‌ மகன் விஷால் (20) இவர் ஐயப்பனுக்கு மாலை போட்ட நிலையில் இன்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை செல்ல இருந்த நிலையில் விஷாலும் அவருடைய நண்பருமான சேவாக்(20) ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள டீ கடைக்குச் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லும்போது கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தன்னுடைய டிராக்டர் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் நிலைதடுமாறி டிராக்டர் மீது மோதியதில் கீழே விழுந்து கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

மேலும் பின்னால் அமர்ந்திருந்த சேவாக் என்பவருக்கு சிறிது காயம் ஏற்பட்டது. மேலும் பலத்த காயமடைந்த விஷாலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி