சென்னை கேகே நகர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பங்குதாரராக இருக்கும் சுமதி என்பவருக்கும் தேன்மொழியின் கணவர் அருண்குமாருக்கும் திருமணத்திற்கு முன்பே இருந்த உறவு திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்ததால் விரக்தி அடைந்த தேன்மொழி, இது சம்பந்தமாக கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
திருமணமாகி 5 மாதமே ஆன நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய தந்தை வீட்டிற்கு கொண்டு போய் விட்டு விடும்படி கேட்டு தேன்மொழி பெற்றோர் வீட்டிற்கு வந்த சில நாளில் மன உளைச்சலின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது சம்பந்தமான முதல் தகவல் அறிக்கையை வாணியம்பாடி கிராமிய காவல் துறை கொடுத்தும் தற்பொழுது வரை மகள் தற்கொலை சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை வைத்து தள்ளாத வயதில் தேன்மொழியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களது மனுவை புகைப்படம் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக இன்று(செப்.23) உறுதி அளித்தார்.