ஆம்பூர் அருகே கதவாலம் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன்-நந்தினி தம்பதியினரின் மகள்களான பவித்ரா (15), ரித்திகா (13) ஆகியோர் வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இதனிடையே விடுதியில் தங்க பிடிக்காத 8-ம் வகுப்பு மாணவியான ரித்திகா, நவ.11 (செவ்வாய்க்கிழமை) 12 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து ஆலங்காயம் போலீசார் விசாரிக்கின்றனர்.