காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் 3 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நேற்று (மே 26) இரவு ஷூ கம்பெனி வேன் டயர் வெடித்ததில், காஞ்சிபுரத்திலிருந்து ஆம்பூர் நோக்கிச் சென்ற கார் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் ஸ்ரீமதி (7), சீதாராமன் (60), மற்றும் டிரைவர் மதன் (40) என மூவர் உயிரிழந்தனர். வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வந்த ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி கண்ணீர் மல்கினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி